
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் மின் துண்டிப்பு மற்றும் பாதிப்பு தொடர்பில் கருத்து கேட்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 3 ஆம் திகதி டிசம்பர் 2021 அன்று மின்கடத்துகை உரிமதாரரின் வலையமைப்பில் இடம்பெற்ற தீவு முழுவதுமான மின்வலு செயலிழப்பு குறித்த விசாரணையை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி நடத்துவதற்கு, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை , பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்
- இந்த பொது விசாரணை நடைமுறையானது நீதிமன்ற நடைமுறையைப் போன்று நடைபெறும்.
- விசாரணையின்போது எந்த கேள்வியும் எழுப்ப முடியாது.
- விசாரணையின் முன் அல்லது அதற்குப் பின்னர் நேர்காணல் அனுமதிக்கப்படாது
- இறுதி முடிவு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும்
- புகைப்படம் எடுக்கலாம் ஆனால், விசாரணைக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

