அடுத்த வாரம் முதல் மின்வெட்டில் புதிய மாற்றம்!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு காலத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply