எண்ணெய் கிடங்கு உள்ள நாட்டுக்கு தொலைபேசியில் நேரடியாக கதைத்த கோட்டா

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொலைபேசி அழைப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மீளாய்வு செய்யப்பட்டன. தலைவர்கள் பொருளாதார ஒத்துழைப்பையும், வர்த்தகம் மற்றும் எரிசக்தி உறவுகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

மேலும் இதன் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் பற்றிய பொதுவான அக்கறையையும் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply