
கொழும்பு கிராண்ட்பாஸ், பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பினை பெற்றுக்கொண்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் – சஜிமாவத்தை பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இன்று அதிகாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் விசேட புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் நீண்ட காலமாக அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மற்றும் எழுத்துமூலஅறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளைமின்சார மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 120 பேர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களை இன்றைய தினம் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

