ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவுக்கு எதிராக அவசரத் தீர்மானம்

உக்ரேனில் இருந்து படைகளை வாபஸ் பெறுமாறு 141 நாடுகள் வலியுறுத்து உக்ரைனிலிருந்து ரஷ்யப்படைகளை வெளியேற்ற வேண்டுமென ஐ.நா. பொதுச்சபையியிலுள்ள 141 நாடுகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்ய மோதல்கள் நிலைமைகளை ஆராய,நேற்று புதன்கிழமை கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில்,இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இவ்விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, இதிலுள்ள 193 நாடுகளில்,141 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.சீனா,இந்தியா,தென்னாபிரிக்கா உட்பட 35 நாடுகள் நடுநிலை வகித்ததுடன்,ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா, பெலாரஸ் சிரியா,எரித்திரியா ஆகியன வாக்களித்தன.கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களால்,பிரதான கலாசார அடையாளங் கள் அழிக்கப்பட்டுள்ளன.அங்கு ஏற்பட்டுள்ள அவலங்கள்,அழிவுகளுக்கு ரஷ் யா பொறுப்புக்கூற வேண்டும்.கொத் தணிக்குண்டுகள்,இரசாயன ஆயுதங்களின் பயன்பாடுகளையும் ரஷ்யா நிறுத்த வேண்டுமெனவும் மாநாடு கோரியுள்ளது.உலகிலிருந்து ரஷ்யா தனிமைப்படுவதை இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்துவதாக ஐ,நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.சுதந்திர தேசங்களாக ரஷ்யா அறிவித்துள்ள டொனஸ் ட் மற்றும் ஹுவான்ஸ் பகுதிகளில் ரஷ்யர்களுக்கு எதிரான நடவடிக்கை களை நிறுத்தவே, இந்த தாக்குதலை ஆரம்பித்ததாக ரஷ்யா தெரிவித்துள் ளது.

Leave a Reply