பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரி இன்று காலை பௌத்தலோக மாவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ,கைதிகள் உரிமைகள் அமைப்பு மௌனப் போராட்டத்தை நடத்தியுள்ளது.
அத்துடன் ஐநா தூதுவருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளது.
போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இணைந்து கொண்டுள்ளார்.
இதன் பொது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற எம்.பி சுமந்திரன்:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கக் வேண்டும். நாளை ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வில் இது பற்றி கவனத்தில் கொள்ளவேண்டும். 40 வருடங்களுக்கு மேலாக இந்த சட்டத்தால் தமிழ் மக்கள் அல்லல் படுகிறன்றனர். உறுப்பு நாடுகள் இது பற்றி கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்றார்.




