ஊர்காவற்துறை – சுருவில் பகுதி கடலிலிருந்து நபர் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (02) மீட்கப்பட்டுள்ளது.
சுருவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த கடந்த 1998ம் ஆண்டு காணிகளை விற்றுவிட்டு பருத்தித்துறையில் குடியேறினர்.
அதன்பின்னர் அங்கு வாழ்ந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல், தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக சுருவிவில் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் காலில் சுகயீனம் உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.
செல்லத்துரை விமலகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


