நா.முத்துக்குமாரை நினைவுக்கூறும் யுவன்!

யுவன் சங்கர் ராஜா தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அந்த திரைப்படம் வெளிவந்து  தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்நிலையில்,  யுவன் ஷங்கர் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ”பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை நினைவுக்கூர்ந்தார். அவர் நல்ல எழுத்தாளர் எனத் தெரிவித்த அவர், இருவர் கூட்டணியிலும்  பல வெற்றி பாடல்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

நா. முத்துக்குமார் இசையைக் கொடுத்த சிறிது நேரத்தில் பாடல் எழுதக் கூடியவர்” என்றும்  குறிப்பிட்டார்.

மேலும் என்னுடன் பணியாற்றிய பாடலாசிரியர்கள் பா.விஜய்,  சினேகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், நான் பயணங்களில் அதிகம் என் அப்பா இளையராஜா பாடல்களைக் கேட்பேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply