எரிபொருள் – மின்சார பிரச்சினை; மீன்வர்களையும் விட்டு வைக்கவில்லை

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் துண்டிப்பு காரணமாக யாழ் மாவட்ட மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

உள்ளூர் சந்தையில் அன்றாடம் மீன்கள் விற்கப்படுகின்றன. இது தவிர இறால், நண்டு, கணவாய் ,பெரிய மீன்கள் ஏற்றுமதிக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு கொண்டு செல்வதற்கு வாடிகளில் மீன்கள் குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டும்.

தற்போது மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் கடல் உணவுகளை பாதுகாக்க முடியவில்லை.

அத்துடன் இங்கிருந்து கொண்டு செல்வதற்கு வாகனங்களுக்கு தேவையான எரிபொருளும் தட்டுப்பாடாக உள்ளது.

எரிபொருள் வாங்குவதற்கு மணித்தியால கணக்கில் நிற்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் பல லட்சம் ரூபா பெறுமதியான கடல் உணவுகள் வீணாகியுள்ளது.

இதற்கு கடல் தொழில் சங்கங்கள் உரிய தரப்பினருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply