மாவைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று (3) வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.
இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலப் பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








