புதிதாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண பிரதம செயலாளருடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களுடனான கலந்துரையாடல் இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், பிரதம செயலாளர் மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு உரையாற்றினார்.

அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் பொது நிதியை முறையாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிறுவன மட்டத்தில் உற்பத்தித்திறன் உயர்வாக செயல்படுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், பொது நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை விரைவாகப் பயன்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *