தனியார் பஸ் சேவை நாளை முதல் ஸ்தம்பிப்பு

கொழும்பு, மார்ச் 03

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு காரணமாக நாளைய தினம் தனியார் பஸ்களின் சேவை முற்றாக தடைப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பகலில் நேரங்களில் கூட பல மணி நேரம் வரிசையில்  காத்திருந்து எரிபொருள் பெற வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துறையில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே பெரும்  கஷ்டத்துடன் கூடிய நஷ்டத்துதையும்  சந்தித்து வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply