இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் தூதுவருடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, C.B. ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதனிடையே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.