பதவி நீக்கிய ஜனாதிபதிக்கு பதில் வழங்கிய விமல்

கொழும்பு, மார்ச் 04

கைத்தொழில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இன்று குறித்த இருவரையும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச “ස්තුතියි !” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply