
உக்ரைன், மார்ச் 04
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகளிடையே நடந்த சண்டை காரணமாக இது தாக்கப்பட்டிருக்கலாம்.
அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ (அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
தென்கிழக்கில் உள்ள தனது நகரத்தின் புறநகரில் உக்ரைனிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடந்ததாக ஓர்லோவ் முன்பு தெரிவித்திருந்தார்.
ரஷ்ய படையினர் நகருக்குள் டாங்கிகளில் நுழைந்து அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், மக்களும் தொழிலாளர்களும் புதன்கிழமை அணுமின் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் திரண்டிருப்பதைக் காண முடிந்தது.
உக்ரைனில் ஸபோரிஷியா உட்பட நான்கு அணு உலைகள் உள்ளன.
இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள செர்னோபிள் போன்ற தளங்களில் உள்ள அணுக் கழிவுகளையும் இது கையாள்கிறது.
“தற்போதைய கடினமான சூழ்நிலையில் அணுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கு முயல்வதால், நாட்டிற்கு அதிகபட்ச உதவிகளை வழங்கும் நோக்கில் யுக்ரேனுடனும் மற்ற நாடுகளுடனும் ஆலோசித்து வருவதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் முன்னதாகக் கூறியது.





