
நேர்வே, மார்ச் 04
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கின்ற 27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 இராணுவ படையினர் வான்பரப்பு, கடல் மற்றும் நிலப் பரப்பு ஆகிய நிலைகளில் தமது மிகப்பெரிய போர்ப் பயிற்சிகளை நோர்வே நாட்டில் மேற்கொள்ள ஆயத்தமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ பயிற்சிகள் குறித்து நோர்வே இராணுவ தரப்பு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறான பயிற்சிகள் வழமையாக நடைபெறும் ஒன்று எனவும் இவை குளிர்கால தரை கடல் மற்றும் வான் இராணுவ பயிற்களை உள்ளடக்கியது எனவும் வழமையாக 40,000 படைகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஆனால் இம்முறை 30,000 படைகளாக குறைப்பு செய்யப்பட்டு மேற்படி பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
ரஷ்யா இந்த பயிற்சிகளுக்கு தனது படைகளை அனுப்ப மறுத்து விட்டதாகவும் நோர்வே இராணுவம்மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





