யாழ்ப்பாணம் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கத்தின் ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து , சங்கானை பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதவி உயர்வு வழங்கு,சம்பளத்தை அதிகரி ,நிரந்தர நியமனம் வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.







