நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும்! வலுசக்தி அமைச்சு நம்பிக்கை

நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தநிலையில், தற்போது குறித்த கப்பல் வந்துள்ளது.

குறித்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply