வதந்திகளை நம்ப வேண்டாம் ; அங்கஜன் எம்பி கோரிக்கை

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பிரதமாரால் நபர் ஒருவர் நியமிக்கப்படுவதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அதற்கான விளக்கத்தை நாடாளுமன்றன உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தற்போது தனது உத்தியோக பூர்வ முகப்புத்தகம் ஊடக தெளிவு படுத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்பதையும், அதுதொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், புதிய நியமனமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய அனைத்து செய்திகளும் பொய்யானவை என்றுள்ளார்.

Leave a Reply