யுகதனவி விவகாரம்; மனுக்களை விசாரணையின்றி நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானம்

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரனைக்கு உற்படுத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்குவழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென உயர் நீதிமன்றம் முன்னதாக அறிவித்தது.

இந்த நிலையிலே, குறித்த மனுக்களை விசாரணையின்றி நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எல்லே குணவங்ச தேரர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபனம், அதன் தலைவர், TrincoPetroleum Terminal தனியார் நிறுவனம், கணக்காய்வாளர் நாயகம், லங்கா IOC நிறுவனம், பாதுகாப்புசெயலாளர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் நியாயமானது அல்ல என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply