15 ஆவது ஐ.பி.எல் . கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது .10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடர் மே 29 ஆம் திகதி வரை நடை பெறும் .
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் மராட்டிய மாநிலம் மும்பை , புனே யில் மட்டும் நடத்தப்படு கிறது .
மும்பையில் உள்ள வான்கடே , பிரபவுர்ன் , டி.வை.படேல் ஸ்டேடியம் ஆகிய மைதானங்க ளில் 55 போட்டிகளும் , புனே மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெறுகிறது.
பிளே – ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா பரவல் கார ணமாக இந்த ஆண்டு தொட டு கி ஐ.பி.எல் . போட்டித் தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதிகிடையாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டு வந்தது .
இந்த நிலையில் ஐ.பி.எல் . கிரிக்கெட் போட் டியை காண மைதான த்தில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
இதற்கான அனுமதியை மும்பை கிரிக்கெட் சங்கத் துக்கும் , மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கும் அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
சமீபத்தில் மராட்டிய அமைச்சர் ஒருவர் கிரி க்கெட் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசியபோது மராட்டியத்தில் நடக்கும் அனைத்து ஐ.பி.எல் . போட்டியிலும் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்க உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .






