எங்களை கேவலமாக பார்க்கின்றனர் – வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை

ஓ.எல், ஏ.எல் பரீட்சை பெறுபேறு இல்லை என புறக்கணிக்கப்பட்டு, முன்பள்ளி மற்றும் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்த ஆசியர்கள் இன்று ஆளுநர் அலுவலகம் முன்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நிரந்தர ஊதியமும் இல்லாமல், பல ஆண்டுகளாக நாம் விரும்பி இந்த ஆசிரியர் தொழிலை செய்து வருகின்றோம். இதற்காக பணத்தை செலவழித்து, முன்பள்ளி டிப்ளோமா மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களை செய்துள்ளோம். ஆனால் இன்றுவரை எம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை. சுகயீனம் மற்றும் கர்ப்பகால விடுமுறைகள் இல்லை.

நாம் 25 வருடங்கள் கடந்து சேவையை செய்து வருகின்றோம். 40 வயதில் ஓ.எல் பரீட்சை எழுத முடியாது. ஆகவே தான் முன்பள்ளி டிப்ளோமா முடியுங்கள் என்று கூறினார்கள்.

அதனடிப்படையில் நாம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். இந்த நிலையில் ஆசிரியர் நியமனத்தில் ஓ.எல், ஏ.எல் பரீட்சை பெறுபேறு வேண்டும்.

அப்போது தான் நியமனத்துக்கு உள்ளீர்க்கப்படுவீர்கள் என்று கூறுகிறார்கள். 25 வருடங்களாக சேவை செய்து வருகின்றோம் எங்கள் நிலை என்ன?.- எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply