உண்மையை ஜீரணிக்க முடியாத அரசு – சிரிக்கும் கம்மன்பில

உண்மையை ஜீரணிக்க முடியாத அரசாங்கத்தினால், நான் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு அமைந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றிரவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனது மனசாட்சி தெளிவாக உள்ளது, நான் கூறியதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் உண்மையைச் சொன்னேன், அதை அரசால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே உண்மையைப் பேசுபவர்களை பதவி நீக்கம் செய்யத் தீர்மானித்தார்கள்.

அரசாங்கக் கட்சிக்குள் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டுமா என ஊடகவியலாளர் ஒருவர் மேலும் வினவியபோது,

கட்சிக்குள் அல்லது அரசாங்கத்திற்குள்ளேயே தனது பதவியைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதில்லை என கம்மன்பில பதிலளித்தார்.

கட்சி அல்லது அரசாங்கத்திற்குள் எனது நிலையைப் பாதுகாக்க நான் ஒருபோதும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் அது குறித்த எனது நிலைப்பாட்டை நான் தொடர்வேன். நான் உண்மையைப் பேசினேன், கட்சிக்குள் எனது பதவியைப் பாதுகாக்க கூடுதல் முயற்சி எடுக்க எந்த காரணமும் இல்லை.- என்றார்.

Leave a Reply