யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் கடுகதி ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன் பாய்ந்தே அவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்தி விட்டு ரயிலின் முன் பாய்ந்துள்ளார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.






