பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டவர் வடையும் ரீயும் வந்து சாப்பிட்டு போகலாம்! – அங்கஜன் எம்.பி

நான் மக்களுக்கு சேவை செய்ய வந்தவன், அதில் நான் பிழை செய்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன் என நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி சில வதந்திகள், பிரதமரின் அலுலவகத்தை பயன்படுத்தி பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதை நான் மறுக்கின்றேன். சிலர் ஊடகத்தை பயன்படுத்தி என்னுடைய வேலைகளை அவர்கள் முடக்கப் பார்க்கின்றனர்.

என்னூடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தமது அரசியல் இருப்பு கேள்விக் குறியாகி விடும் என்ற நோக்கில் இப்படியான வதந்திகளுக்கு உடந்தை வழங்கி கொண்டு இருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள்.

இவர்களோடு சண்டை போடுவதற்கு எனக்கு நேரமில்லை. மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளது. இந்த வருடமும் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெறும்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டடார். அவர் இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று வடையும் ரீயும் சாப்பிடலாம். – என்றார்.

Leave a Reply