வட்டுக்கோட்டையில் அனுமதியின்றி அமைக்கப்படும் பேருந்து தரிப்பிடம்: வடக்கு ஆளுநருக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து தரிப்பிடம் தொடர்பாக, வடக்கு மாகாண ஆளுநருக்கு மூளாய் மக்கள் என்ற பெயரில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாவது:

வட்டுக்கோட்டையில் (செல்லத்துரை கடைக்கு அண்மையாக) திரு.அருளாளன் மற்றும் திருமதி சர்வேஸ்வரி ஆகியோர் தமது தந்தை நினைவாக பேரூந்து தரிப்பிடம் ஒன்றை அமைத்து வருகின்றார்கள். குறித்த தரிப்பிடம் அமைத்தல் சார்பில் கீழ் வரும் விடயங்கள் தங்கள் தயவான கவனத்திற்கு

01 குறித்த மதிலோ அல்லது அதனோடிணைந்த பேருந்து தரிப்பிடமோ அமைப்பதற்கு வலிமேற்கு பிரதேச சபையில் அனுமதி பெற்றிருக்கவில்லை. (கடந்த 26.02.2022 வலிமேற்கு செயலாளரிற்கு – 0777145471 இலக்க தொலைபேசியில் தெரியப்படுத்தியிருந்தோம்).

  1. பேருந்து தரிப்பிடம் ஒன்று அமைப்பதாக இருந்தால் இலங்கை போக்குவரத்துச் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும். அதுவும் பெறப்படவில்லை. (வட பிராந்திய பிரதம இலக்க தொலைபேசியில் கடந்த 26.02.2022 திகதி முகாமையாளரின் 0771058100 இதுவரை தெரியப்படுத்தியிருந்தோம்). எனினும் இருவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  2. நாற்சந்தி ஒன்று இருப்பின் அதிலிருந்து 25அ இற்கு அப்பால் பேருந்து தரிப்பிடம் அமைத்தல் வேண்டும். இது சட்டம் மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது. எனினும் நாற்சந்தியிலிருந்து 05 மீற்றருக்குள் அமைக்கப்படுகின்றது.

04.இது சுனுயு வீதியாகும். எனினும் சுனுயு இன் அனுமதி பெறப்படவில்லை.

  1. ஏற்கனவே இந்நாற்சந்தியில் இளைஞர்கள் கூடி கதைப்பது, இரவில் நிற்பது போன்ற இன்னல்களை மக்கள் எதிர்நோக்கிவரும் நிலையில் சந்திக்கு அண்மையில் பேருந்து நிலையத்தினை அமைப்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும்.
  2. இம்முறையற்ற (அதாவது சட்டரீதியான அனுமதி பெறாது) கட்டடம் அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதிப்பதானது, மற்றையவர்களுக்கும் பிழையானதொரு முன்னுதாரணமாக அமைந்துவிடும். அவரவர் தங்கள் இஸ்டத்திற்கு பேருந்து தரிப்பிடத்தினை பல்வேறு உறவுகளின் பெயரில் அமைப்பதற்கு முற்படுவர்.

எனவே தயவுசெய்து மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டு குறித்த பேருந்து தரிப்பிடம் தடைசெய்வதற்கு அமைப்பதனை கேட்டுக்கொள்கின்றேமை நடவடிக்கை எடுத்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.- என்றுள்ளது.

Leave a Reply