
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கல்வியியற் கல்லூரியில் நேற்று இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரப் பெட்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





