
பொன்னாலை வீதியில் இரத்தக்கறையுடன் நபரொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொன்னாலை- பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம் காணப்பட்டது.
சடலம் காயங்களுடனும் சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்த உயிரிழப்பு விபத்தா அல்லது கொலையா என்று இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





