ஒட்டுசுட்டானில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பழம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நேற்றிரவு பழம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

மாத்தறை, காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நால்வர் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த ஒருவர் என நால்வரை கைது செய்துள்ள ஒட்டுசுட்டான் பொலிசார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் புதையல் தோண்டுவதற்காக வந்துள்ளதுடன் இவர்களிடம் வெத்திலை பாக்கு, பழம், சாம்பிராணி, பால் போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை, தண்ணிமுறிப்பு பகுதிகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலத்தில் அதிகரித்து வருகின்றமையும் ஆளுந்தரப்பு ஆசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றவர்களாலேயே குறித்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply