சட்டவிரோதமாக 30 இற்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 30 இற்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி உட்பட இருவர் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கொண்டுவரப்பட்ட சுமார் 30 க்கும் அதிகமான ஆடுகளே இவ்வாறு கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

குறித்த ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 47 மற்றும் 59 வயது இரு சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply