
முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனையடுத்தே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்கள், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் எமது போராட்டத்துக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இது போன்ற போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே எமக்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்
-என்றனர்.





