
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்குள் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன்ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளை மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், உறுப்பினரின் தந்தையைத் தாக்க முற்பட்டதுடன், வீட்டின் வேலிகளையும் சேதப்படுத்தி உள்ளார்.
பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , நாடாளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி , அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தை அவரைத் தடுக்க முற்பட்ட வேளை அவரைத் தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கதவை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.





