
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுடன் பொதுமக்கள் நீண்டவரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.
நாட்டில் தற்போது நிலவி வரும் டொலர் தட்டுப்பாட்டால் எரிபொருள் தடடுப்பாடு மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.
இதற்கமையவே குறித்த நிலையத்தில் மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.





