நாட்டில் இனி மக்கள் வாழ முடியாது – சரத் பொன்சேகா

இன்று நாட்டு மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்ப்பட்டுள்ளது.ஒருபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மறுபுறம் மக்களுக்கு வருமான இழப்பு என்பனவற்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களைப் பெறுவது பெரும் சவாலாக இருந்தாலும், அவை குறித்து அரசாங்கம் மவுனம் காக்கிறது.மக்கள் நலன் கருதி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி நடப்பதாக தெரியவில்லை. 1977 இல் ஏற்பட்ட வரிசை யுகத்தை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் வரிசை யுகத்தில் ஒரு திட்டம் இருந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் வரிசைகள் உருவாக்கப்படுவது போல் தெரிகிறது.ஒரு பக்கம் அத்தியவசிய உணவுப் பொருட்கள், மறுபுறம் பால் மா, மறுபுறம் எரிவாயு, சிமெந்து என்று வரிசைகள் உருவாகிய வன்னமுள்ளன.

சரியான நேரத்தில் தோவையான இடத்திற்கு செல்ல முடியாது. வீட்டு வேலை செய்ய முடியாது.குழந்தைகளை சரியான நேரத்தில் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.எனவே, வரிசை யுகம் என்பது, ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.இது எங்கு சென்று முடியும் என்பது யாருக்கும் தெரியாது.

இதற்கிடையில் நாடு வக்குரோத்து அடைந்து வருவதை நாம் அறிவோம்.டொலர் இல்லாத பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.நம் நாட்டின் அபிமானமும், நற்பெயரும் பறிபோகும் வன்னம் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெட்கமின்றி நாட்டின் ஆட்சியாளர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.தற்சமயம் இலங்கை கடனை செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என்று உலகமே பேசுகிறது என்றார்

Leave a Reply