நாட்டில் மின்சாரக்கட்டணமும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டின் நிலவும் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை உறவுகளின் பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இதுவரையில் விலை அதிகரிப்புக்கு உட்படாத ஒரே சேவை மின்சாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய விலை நிர்ணயத்தை இனியும் பேண முடியாது என்றார்.

மேலும், மழை இல்லாததால் ஜனவரிஇ பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் ஒரு வல பகுதிகளில் லேசான மழை பெய்யுமெனவும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply