
யாழ்ப்பாணம், மார்ச் 04
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயணித்த படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.





