
முல்லைத்தீவு, மார்ச் 05
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் கற்குவாரிப் பகுதியில் வசித்து திருச்செல்வம் நிதர்சனா (22) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில் வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில் யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.





