
கொழும்பு, மார்ச் 05
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதுவரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளில் 30 வீதமானோர் (29,703) ரஷ்யாவை சேர்ந்தவர்களாவர்.
இதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 25,763 சுற்றுலாப்பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த 18,782 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியைச் சேர்ந்த 13,893 சுற்றுலாப்பயணிகளும் மற்றும் உக்ரைனை சேர்ந்த 13,893 பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பெப்ரவரி இறுதி வரை ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே அதிகமாக வருகை தந்துள்ளனர்.





