உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை (படங்கள்)

உக்ரைன், மார்ச் 5

உக்ரைன் மீது 10 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

இதற்கிடையில், உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28-ம் திகதி ரஷ்ய படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. 6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருதவி செய்தது. அந்த சரக்கு விமானம் ரஷ்ய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது. விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply