மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தையே மீன்பிடி அமைச்சர் கொண்டுவர முயற்சிக்கிறார் – வர்ணகுலசிங்கம் காட்டம்

 மீன்பிடி அமைச்சரால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்  ஏற்கனவே மீனவர்ளால் நிராகரிக்கப்பட்டது என   நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்

தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் கொண்டுவரப்பட விருப்பதாக தெரிவிக்கப்படும் மீன் பிடிச் சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகவும்  அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சர் கொண்டுவர முயற்சிப்பபதாகவும் வடக்கு மாகாண மீனவ மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். 

அவர் இன்று வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள 16 மீன்பிடி தொழில்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன் தமிழ் மக்கள் தமிழ் மக்களிற்கே வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை என்றும் இதனாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிராகரிக்குமாறும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *