பியூஸ்லஸின் உடல் மன்னாரை வந்தடைந்தது!

மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் பனங்கட்டுக் கொட்டிலிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் அவருக்கு பூநகரி, முழங்காவில் , தேவன்பிட்டி, விடத்தல் தீவு, ஆண்டாங்குளம், அடம்பன் ஆகிய இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் விளையாட்டுக் கழக வீரர்கள், வர்த்தகர்கள், மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து பியூஸ்லஸின் உடலைப் பவனியாக எடுத்து வந்தனர்.

உடல் அஞ்சலிக்காக மன்னார் பனங்கட்டுக் கொட்டிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை மாலை மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply