புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், சண்டிலிப்பாய் வடலியடைப்பு பகுதியில் கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
குறித்த திறப்பு விழாவில், வண. கொங்கல சிரி தர்மதேரர், சிவப்பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சிவதாண்டவ சிவாச்சாரியார் , அருட்தந்தை ஜோர்ச் ஜெயக்குமார், மௌலவி எம்.ஏ.எம்.அஸ்லாம் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் செயலாளர் யசோதா உதயகுமார், யாழ் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபர் ம். பிரதீபன், மேலதிக செயலாளர் திலக் கெட்டி ஆராட்சி செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில், கலச்சார மத்திய நிலைய மாணவர்களால் கிராமிய நடனமும், பிரதேச கலைஞர்களால் பல்லியமும் மிருதங்க வாசிப்பும் சிறப்பாக முன்னெடுக்கப்படுள்ளதோடு, அங்கு வருகை தந்திருந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், இசைக்கருவிகள் என்பனவும் கையளிக்கப்பட்டுள்ளன.












