மூன்று நாட்கள் டீசலுக்காக வீதியில் காத்திருந்த வாகன சாரதிகள்

நாட்டில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.

இந்த நிலையில் , ஹட்டனில் ஐஓசி மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்று நாட்களாக எரிபொருள் இல்லாததால், வாகனச் சாரதிகள் எரிபொருள் நிரப்புவதற்காக பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்தி காணப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று (04) காலை ஹட்டனில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொழும்பிலிருந்து வந்த பவுசர் ட்ரக் வண்டியில் இருந்து 6600 லீற்றர் டீசல் விடுவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை முதல் 3000 ரூபா பெறுமதியான டீசல்,அவர்களது வாகனங்கள் மற்றும் கொள் கலன்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply