
பலாங்கொட, மார்ச் 05
இவ்வருடம் அரச வெசாக் நிகழ்வு பலாங்கொடை – கூரகல விகாரையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் அரச சொக் நிகழ்வு நடத்தவது குறித்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பூமியான பலாங்கொடை கூரகல பொளத்த விகாரையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் ஆரம்ப பணிகள் வணக்கத்திற்குறிய வதுரகும்புரே தம்மரத்ன நாஹிமி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் தலைமையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இம்முறை வெசாக் அரச நிகழ்வை மேற்படி கூரகல விகாரையில் நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.





