அமெரிக்க டொலருக்கு ரூ.240: நிமால் சிறிபால டி சில்வா தகவல்

கொழும்பு, மார்ச் 5: அமெரிக்க டொலர் ஒன்றுக்கு ரூ.240 வழங்கக்கோரி அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கு கூடுதலாக பணம் அனுப்பி வைப்பது வழமை. நாட்டில் தற்பொழுது டொலர் பெறுமதி தொடர்பில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளினால், வெளிநாடுகளில் பணியாற்றுவோர் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணம் அனுப்பி வைக்க முயற்சிக்கின்றனர். இதனால் அந்நிய செலாவணி கையிருப்பில் பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டொலருக்கு 240 ரூபா செலுத்தப்பட்டால் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்புக்களின் ஊடாக சட்ட ரீதியாக பணம் அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அவர்.

Leave a Reply