
அம்பாரை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் இன்று (05) பதிவாகியது.
மருதமுனை – பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இமாம் கஸ்ஸாலி வீதியில் வீடு ஒன்றில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, குறித்த வீட்டின் கேஸ் அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
எனினும் சமையலில் ஈடுபட்டிருந்த நபருக்கே அல்லது வேறு எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





