
நாட்டிற்கு எரிபொருள் இருப்புக்கள் உரிய முறையில் கிடைக்கப் பெறுமாயின், மின்தடை அமுலாகும் காலப்பகுதியில் இன்று முதல் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எரிபொருள் கையிருப்புகளின் அடிப்படையில் திட்டமிட்ட மின்தடையினை இடைநிறுத்தல் அல்லது குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அத்துடன் மின்தடை அமுலாகும் காலப்பகுதி இன்று முதல் குறைவடையும் என அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றும் திட்டமிட்ட மின்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி நாட்டில் இன்றைய தினம் P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் 3 மணித்தியால மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மேலும் E மற்றும் F ஆகிய வலயங்களில் 4 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை A, B மற்றும் C ஆகிய வலயங்களில் மாத்திரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.





