போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞன் பலி! – யாழில் சம்பவம்

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதையடுத்து, இரவு உயிரிழந்தார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் அதிகளவிலான மாத்திரைகளை ஒரே தடவையில் உட்கொண்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது இரண்டு போதை மாத்திரைகளை உட்கொண்ட மற்றையவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply