
உக்ரைனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு அவசர அடிப்படையில் போக்குவரத்து விசாவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ஏறக்குறைய 1,561 இலங்கை மாணவர்கள் உயர் கல்வியில் ஈடுபடுகின்ற பெலாரஸிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகத்தால் நடாத்தப்பட்ட சந்திப்புகளில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இலங்கைக்கு தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதை எளிதாக்கும் பணியில் தூதரகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக, தூதரகம் பெலாரஸில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, விசா வழங்கும் ஏற்பாட்டைச் செய்துள்ளது.
அதன்படி, தற்காலிகமாக இலங்கைக்கு நாடு திரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களும் மொஸ்கோவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்காக 0079801445726 என்ற தொலைபேசி இலக்கத்துடன் 24 மணிநேரமும் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முடியும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





