மன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக டீசலுக்கு தட்டுப்பாடு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், டிப்பர் சாரதிகள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பானது மிகவும் குறைவான நிலையில் காணப்படுவதுடன் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமல் காணப்படுகிறது.

இதன்காரணமாக டிப்பர் வாகனங்கள் மற்றும் மீன் ஏற்றுமதி வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காணப்படுகின்றன.

டீசல் இன்மையால் தூர இடங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள், சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் பல இடங்களில் டீசல் பதுக்கல் இடம்பெறுவதுடன் தொடர்ச்சியாக டீசல் பற்றாக்குறை நிலவும் என்பதால் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரல், கேன்களுடனும் டீசலுக்காக காத்திருக்கின்றனர்.

Leave a Reply